OUT CAMPAIGN – Declaration Translated Into TAMIL
Translation by Vijay Prakash S with additional input from Bala Bhaskar
நாத்திகர்கள் என்றும் பகுத்தறிவுமிகுந்த சிந்தனையின் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். ஆகவே உங்கள் கருத்துக்களை எந்த ஒரு தயக்கமும் இன்றி OUT பிரச்சாரம் மூலம் பகிர்ந்துக்கொள்ளலாம்.

நாத்திகர்களின் எண்ணிக்கை இச்சமூகம் நினைப்பதை விட அதிகமே. எழுந்து வெளியே வாருங்கள். சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்கள் எடுத்துக்காட்டு பிறர்கள் தங்களையும் வெளியே கொண்டு வர ஊக்குவிக்கும். (அவர்களாக வெளியே வர வேண்டுமே தவிர கட்டாயத்தால் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)

OUT பிரச்சாரம் பிற நாத்திகர்கள் தனியாக இல்லை என்பதை தெரியப்படுத்தும். கலந்துரையாடல்கள் மூலம் நாத்திகத்தின் மேலுள்ள தவறான எண்ணங்களை வெளியேற்றவும் உதவும். நாத்திகர்களான நம்மை சபித்து ஒரு இருட்டில் தள்ள அனுமதிக்க மாட்டோம் என்பதையும் நாம் மறைந்து விட மாட்டோம் என்பதையும் இவ்வுலகம் உணரட்டும்.

OUT பிரச்சாரத்தில் நிறையபேர் சேர சேரத் தான் “நான் ஒரு நாத்திகன்” என்று கூறுவதில் தயக்கம் குறையும். நாத்திகர்கள் பல நிறம், தோற்றம் மற்றும் பல எண்ண்ஙள் போன்ற வேறுபாடுகள் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய உதவுவோம். தொழிலாளிகளும் வல்லுனர்களும் நம்முள் அடங்குவர். அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், சகோதிரி மற்றும் வயோதியர்கள் போன்றவர்களும் நம்முள் அடங்குவர். நாம் அனைவரும் மனிதர்கள் (இயற்கையின் பரிணாமத்தால் வந்தவர்கள்) நல்ல நண்பர்கள், நல்ல குடிமக்கள். இறைநம்பிக்கை நமக்கு அவசியமில்லை என்று உணர்ந்த நல்ல மக்கள்.

அரசியலிலும் பள்ளிக்கூடங்களிலும் மதங்கள் நுழைவதை எதிர்த்துக் குரல் கொடுப்போம். மதம் சார்ந்த கோட்பாடுகளை நமது குழந்தைகளின் உள்ளங்களிலும், அரசாங்கத்திலும் திணிக்கப்படுவதைக் கண்டு நாத்திகர்கள் மட்டுமின்றி பல இலட்சக் கணக்காணோர் வருந்துகின்றனர். அறநெறிக் கொள்கைகளிலிருந்தும், அரசாங்கக் கொள்கைகளிலிருந்தும் நாம் இந்த பகுத்தறிவின்மையை அகற்ற வேண்டும். நாம் இக்கணம் எழுந்து நின்று புறப்பட வேண்டும். சிறந்து விளங்க வேண்டும்

OUT பிரச்சாரத்திற்காக பல உற்சாகமான திட்டங்களும் செயல்பாடுகளும் உள்ளன, ஆதலால் புதிய நிகழ்வுகளைப் பற்றி கண்டறியத் தவற வேண்டாம். OUT பிரச்சாரத்தில் சிவப்பு ‘A’ உடைய T-shirts, lapel pins, buttons மற்றும் stickers இப்போது கிடைக்கும்.
OUT CAMPAIGN website